×

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி மதுரை மாணவர்கள் அசத்தல் சாதனை

மதுரை, டிச. 30: சண்டிகரில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டிகள் கடந்த டிச.11ம் தேதி துவங்கி டிச.23ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழக அணியினர் உள்பட 29 மாநிலங்களை சேர்ந்த 1670 மாணவ- மாணவிகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழக அணி சார்பில் 36 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில் 8 பிரிவுகளில் தமிழக அணி சிறப்பாக விளையாடி பதக்கங்கள் குவித்தன.

இதில் மதுரையை சேர்ந்த மாணவர் லோகேந்திர மங்களநாதன், மாணவி சங்கீதா உள்ளிட்ட மாணவர்கள் வௌ்ளி, வெண்கலம் பதக்கம் வென்று சாதித்தனர். வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த மாணவ, மாணவிகளை மதுரை அலெக்ஸ் ஸ்கேட்டிங் அகாடமி பயிற்சியாளர் அலெக்சாண்டர், செயலாளர் புரோன்மணி, துணை பயிற்சியாளர்கள் விக்னேஷ், பாலா, சத்யா, சிவா, முருகன், பிரசன்னா மற்றும் பல்வேறு பிரமுகர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

The post தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி மதுரை மாணவர்கள் அசத்தல் சாதனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,National Roller ,National Roller Skating Hockey Tournament ,Chandigarh ,Tamil ,Nadu ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி